ஆட்டுக்கறி, கோழிக்கறியுடன் காங்கிரஸ் தலைவர் விருந்து
ஆட்டுக்கறி, கோழிக்கறியுடன் காங்கிரஸ் தலைவர் விருந்து
ADDED : பிப் 03, 2024 11:06 PM
சாம்ராஜ்நகர்: லோக்சபா தேர்தல் சூடு பிடித்துள்ளது. சீட் எதிர்பார்க்கும் காங்கிரஸ் தலைவர் ஒருவர், தன் ஆதரவாளர்களுக்கு ஆடம்பர விருந்து ஏற்பாடு செய்தார்.
லோக்சபா தேர்தலுக்கு, ஆளுங்கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சியான பா.ஜ., - ம.ஜ.த., விறுவிறுப்பாக தயாராகின்றன. ம.ஜ.த.,வை விட, பா.ஜ., காங்கிரசில் சீட் எதிர்பார்ப்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. மேலிடத்தின் கவனத்தை தன் வசம் திருப்ப முயற்சிக்கின்றனர்.
சாம்ராஜ்நகர் லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் பிரமுகர் நடராஜ் 'சீட்' எதிர்பார்க்கிறார். தொகுதியை சுற்றி வந்து, மக்களின் மனதில் இடம் பிடிக்க முயற்சிக்கிறார். தன் ஆதரவாளர்கள், தொண்டர்களுக்காக, பிளிகிரி ரங்கன மலை அடிவாரத்தில், வட்டகெரேவில் உள்ள தனியார் ஆடிட்டோரியத்தில், நேற்று விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.
ஆட்டுக்கறி, கோழிக்கறி, முட்டை, கேழ்வரகு களி, சாதம், குழம்பு உட்பட, வகை வகையான அசைவ உணவுகள் இருந்தன.