காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
UPDATED : ஏப் 25, 2024 04:05 PM
ADDED : ஏப் 25, 2024 04:03 PM

புதுடில்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் கார்கே கூறியிருப்பதாவது: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயாராக உள்ளேன். தன்னை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பலன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத அம்சங்களை பிரதமரின் ஆலோசகர்கள் அவருக்கு கூறியுள்ளனர்.
பொய்யான அறிக்கை
பிரதமர் என்ற முறையில் பொய்யான அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்பதற்காகவே நேரில் சந்தித்து விளக்கம் தர விரும்புகிறேன். மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளுக்கு உங்கள் அரசு பொறுப்பு கிடையாதா?. உங்கள் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது, அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நீங்கள் செய்தது என்ன?. இவ்வாறு கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.

