sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

39 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது காங்., : வயநாடு தொகுதியில் மீண்டும் ராகுல்

/

39 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது காங்., : வயநாடு தொகுதியில் மீண்டும் ராகுல்

39 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது காங்., : வயநாடு தொகுதியில் மீண்டும் ராகுல்

39 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது காங்., : வயநாடு தொகுதியில் மீண்டும் ராகுல்


ADDED : மார் 08, 2024 11:39 PM

Google News

ADDED : மார் 08, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் எட்டு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் போட்டியிட உள்ள, 39 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை அக்கட்சி தலைமை நேற்று வெளியிட்டது. காங்., முன்னாள் தலைவர் ராகுல், கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, 16 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் போட்டியிட உள்ள 195 வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ., தலைமை சமீபத்தில் அறிவித்தது.

இதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பதில் சுறுசுறுப்பு காட்ட துவங்கியது. கட்சியின் தேர்தல் கமிட்டி நேற்று முன்தினம் டில்லியில் கூடியது. அப்போது, முதல்கட்ட பட்டியிலில் 39 பெயர்களை கட்சி தலைமை இறுதி செய்தது. இதை காங்., பொது செயலர் கே.சி.வேணுகோபால் நேற்று வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் வேணுகோபால் கூறியதாவது:

சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா உள்ளிட்ட எட்டு மாநிலங்கள், லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் போட்டியிட உள்ள 39 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், 15 பேர் பொதுப்பிரிவையும், 24 பேர், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவையும் சேர்ந்தவர்கள். முதல்கட்ட பட்டியலில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களும், இளைஞர் காங்.,கை சேர்ந்த இளம் தலைமுறையினரும் சம அளவில் இடம் பெற்றுள்ளானர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பட்டியலில், காங்., முன்னாள் தலைவர் ராகுல், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல், பொது செயலர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுகிறார். அம்மாநிலத்தின் திருச்சூர் தொகுதியில் மூத்த தலைவர் கே.முரளீதரனும், ஆலப்புழா தொகுதியில் கே.சி.வேணுகோபாலும், திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூரும் போட்டியிடுகின்றனர்.

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் அம்மாநிலத்தின் ராஜ்நந்த்காவ்ன் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மருமகளும், நடிகர் சிவராஜ் குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ் குமார் போட்டியிடுகிறார்.

முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் சத்தீஸ்கர் - 6, கர்நாடகா - 7, கேரளா - 16, மேகாலயா - 2, நாகாலாந்து - 1, சிக்கிம் - 1, தெலுங்கானா - 4, திரிபுரா - 1, லட்சத்தீவு - 1 என, மெத்தம் 39 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us