மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம்: பிரதமர் மோடியிடம் கார்கே வலியுறுத்தல்
மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம்: பிரதமர் மோடியிடம் கார்கே வலியுறுத்தல்
ADDED : டிச 27, 2024 10:12 PM

புதுடில்லி: '' முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: மன்மோகன் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். தலைவர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்களின் இறுதிச்சடங்குகள் நடக்கும் இடத்திலேயே அவர்களின் நினைவிடங்கள் வைத்திருப்பது போன்ற பாரம்பரியத்தைத் தொடரும்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மன்மோகன் எடுத்த முடிவுகளின் பலன்களை தேசம் இன்று அனுபவிக்கிறது. நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தான் , இந்தியாவை நெருக்கடியில் இருந்து விடுவித்து, பொருளாதார செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி நாட்டை அழைத்துச் சென்றார்.
பிரிவினையின் வலிகள் மற்றும் துன்பங்கள், அவரது முழு மன உறுதி மற்றும் உறுதியின் மூலம் அவர் உலகின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவராக உயர்ந்தார்.இதனை கருத்தில் கொண்டு, மன்மோகன் சிங் அந்தஸ்துக்கு ஏற்றவாறு, அவரின் இறுதிச்சடங்குகளை, அவரது நினைவிடம் அமையக்கூடிய இடத்தில் நடத்த வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.

