ADDED : பிப் 03, 2024 11:10 PM
பெங்களூரு: 'லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, மத கலவரத்தை உருவாக்கி, நாட்டை பிரிக்கும் பேச்சில் காங்கிரஸ் ஈடுபட்டு உள்ளது' என, மாநில பா.ஜ., குற்றம் சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக கர்நாடக மாநில பா.ஜ., தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
கர்நாடகத்தில் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற காங்கிரசின் உத்திகள்:
l வகுப்புவாத கலவரங்களை உருவாக்குவது
l நாட்டை பிளவுபடுத்துவது போன்ற பேச்சுக்களை பரப்புவது
l மத்திய அரசை குற்றம்சாட்டி விமர்சிப்பது
l பேச்சு சுதந்திரம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் போலி செய்திகளை பரப்புதல்
l இந்திய பாரம்பரியத்தை அவமதித்தல்.
நாட்டில் 400 தொகுதிகளை பா.ஜ., கைப்பற்றி சாதனை படைக்கும் என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புக் கொண்டுள்ளார்.
வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், சர்க்கசில் வரும் குரங்குகள் போன்று காங்கிரசார் செயல்படுகின்றனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.