ADDED : பிப் 15, 2024 06:25 AM
பெங்களூரு : ''மங்களூரில் நாளை மறுதினம் காங்கிரஸ் தொண்டர்கள் மாநாடு நடக்கவுள்ளது. இதில் தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும்,'' என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
தட்சிண கன்னடா, மங்களூரின், அட்யாரில் உள்ள சஹ்யாத்ரி பொறியியல் கல்லுாரி விளையாட்டு அரங்கில், நாளை மறுதினம் காங்கிரஸ் மாநாடு நடக்கவுள்ளது. இதில் கட்சி தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், பிரமாண்ட மாநாடு நடக்கவுள்ளது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், தொண்டர்கள் மாநாட்டுக்கு வர வேண்டும்.
லோக்சபா தேர்தல் நெருங்குவதால், கட்சியை தயாராக்க வேண்டும். இது தொடர்பாக, தொண்டர்களின் கருத்துகள், ஆலோசனை கேட்கப்படும். இதற்காக இம்மாநாடு நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

