ADDED : மார் 04, 2024 06:57 AM
ஹாவேரி: ஷிகாவி தொகுதி ம.ஜ.த., தலைவர் சசிதர் ஹெல்லிகார், விரைவில் பா.ஜ.,வில் இணைய உள்ளார்.
லோக்சபா தேர்தலை ஒட்டி, கர்நாடகா அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி மாறும் படலத்தை துவங்கி உள்ளனர். ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மனோகர் தாசில்தார், நேற்று முன்தினம் பா.ஜ.,வில் இணைந்தார்.
இந்நிலையில் ஹாவேரியின் ஷிகாவி தொகுதி ம.ஜ.த., தலைவரான சசிதர் ஹெல்லிகார், முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து, பா.ஜ.,வில் இணைய விரும்புவதாக கூறி உள்ளார்.
இதையடுத்து சசிதர் ஹெல்லிகாரை, எடியூரப்பாவிடம், அழைத்து சென்று, சந்திக்க வைத்தார். இன்னும் ஓரிரு நாட்களில், சசிதர் ஹெல்லிகார் பா.ஜ.,வில் இணைகிறார். இவர் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.
கடந்த சட்டசபை தேர்தலில், ஷிகாவி தொகுதி காங்கிரஸ் 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் காங்கிரசில் இருந்து விலகி, ம.ஜ.த.,வில் இணைந்து போட்டியிட்டு தோற்றார்.

