தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தொகுதி மறுவரையறை மசோதா; தேசியவாத காங்கிரஸ் ஆதரவு

தொகுதி மறுவரையறை மசோதா; தேசியவாத காங்கிரஸ் ஆதரவு

தொகுதி மறுவரையறை மசோதா; தேசியவாத காங்கிரஸ் ஆதரவு


ADDED : நவ 27, 2026 10:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2026 10:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவ.30ம் தேதி லோக்சபாவும், டிச.2ம் தேதி ராஜ்யசபாவும் பார்லி. நிரப்ப அமர்வாக கூடுகின்றன. கூட்டத்தில் தொகுதி மறு வரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு கொண்டு வருகிறது.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு இண்டி கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மற்ற கட்சிகளின் நிலை என்ன என்பது பற்றிய அறிவிப்புகள் வெளியாகவில்லை.

இந் நிலையில், மசோதாவுக்கு ஆதரவு அளிக்க சரத்பவாரின் தேசியவாத காங். முடிவு செய்திருக்கிறது. சரத்பவாரை சந்தித்து ஆலோசனை நடத்திய அக்கட்சியின் மஹாராஷ்டிரா எம்எல்ஏ ஜிதேந்திர அவ்ஹாத் கூறியதாவது;

சரத்பவார் கடவுள் போன்றவர். அவரின் முடிவு என் முடிவு, அவரின் வார்த்தை என்னவோ அதன்படியே நான் செயல்படுவேன். தொகுதி மறுவரையறை என்பது அரசியலமைப்பு சார்ந்த நடைமுறை. அது நடத்தப்பட வேண்டும் என்று சரத்பவார் கூறி இருக்கிறார்.

எனவே, மசோதாவுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நிச்சயமாக மசோதாவுக்கு ஆதரவு அளிப்போம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். செயல் தலைவர் சுப்ரியா சுலேவின் முடிவின் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்.

இவ்வாறு ஜிதேந்திர அவ்ஹாத் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us