நேபாளி உட்பட 9 மொழிகளில் அரசியலமைப்பு சட்டம் வெளியீடு
நேபாளி உட்பட 9 மொழிகளில் அரசியலமைப்பு சட்டம் வெளியீடு
ADDED : நவ 26, 2025 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசியலமைப்பு தினத்தையொட்டி, பழைய பார்லி., மைய மண்டபத்தில் நேற்று நடந்த விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, போடோ, காஷ்மீரி, தெலுங்கு, ஒடியா, அசாமி ஆகிய ஒன்பது பிராந்திய மொழிகளில் அரசியலமைப்பு சட்டங்களின் மொழிபெயர்ப்பை ஜனாதிபதி முர்மு வெளியிட்டார்.
இது தவிர, 'இந்திய அரசியலமைப்பில் கலை மற்றும் கையெழுத்து' என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தன் உரையை தமிழில் வாசித்தார்.

