தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/நீதித்துறைக்கு அரசியலமைப்பு சட்டம் வழிகாட்ட வேண்டும்: தலைமை நீதிபதி சூர்ய காந்த் பேச்சு

நீதித்துறைக்கு அரசியலமைப்பு சட்டம் வழிகாட்ட வேண்டும்: தலைமை நீதிபதி சூர்ய காந்த் பேச்சு

நீதித்துறைக்கு அரசியலமைப்பு சட்டம் வழிகாட்ட வேண்டும்: தலைமை நீதிபதி சூர்ய காந்த் பேச்சு


ADDED : அக் 30, 2026 08:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 08:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது சிறப்பு நிருபர்

டில்லி உயர் நீதிமன்றத்தின் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், டீப் பேக்குகள் மற்றும் ஏஐ தொழில் நுட்பத்தின் தவறான பயன்பாட்டை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசினார்.

அவர் கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்யக்கூட முடியாத சவால்களை இன்றைக்கு நீதிமன்றங்கள் எதிர்கொள்கின்றன. செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படைப்புகள் பதிப்புரிமைப் பாதுகாப்பைக் கோர முடியுமா, சட்ட அமைப்பு டீப்பேக்குகளை எவ்வாறு கையாள வேண்டும்.

தொழில்நுட்பம் தனிமனித உரிமைகளைச் சிதைக்க அனுமதிக்காமல் புதுமைகளை எவ்வாறு வளர்ப்பது என்பன போன்ற சவால்கள் இதில் அடங்கும். இதற்கு எல்லாம் சட்டப் புத்தகத்தில் உடனடியாக பதில்கள் கிடைப்பது அரிது. சட்டம் மவுனமாக இருக்கும் இடங்களில், அரசியலமைப்பு சட்டமே நமக்கு வழிகாட்ட வேண்டும்.

உச்ச நீதிமன்றம் டில்லி உயர் நீதிமன்றத்துடன் ஒரு சிறப்பு உறவைப் பேணி வருகிறது. அது வெறும் அருகாமையில் இருப்பதால் மட்டுமல்ல, மற்ற உயர் நீதிமன்றங்களுடன் ஒப்பிடும்போது உச்ச நீதிமன்றத்தின் பணிச்சுமையில் மிகப் பெரிய பங்கை டில்லி உயர்நீதிமன்றம் சுமப்பது தான் காரணம். இவ்வாறு சூர்யகாந்த் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us