ADDED : ஜன 21, 2025 09:42 PM
புதுடில்லி: வீடு கட்டித்தருவதாக முதலீட்டாளர்களிடம் 30 கோடி ரூபாய் ஏமாற்றியதாக ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
டில்லியைச் சேர்ந்த சுனில் குப்தா உள்ளிட்ட பலரிடம் வீடு கட்டித் தருவதாகக் கூறி, ஹரிந்தர் பாஷிஸ்டா, 49, என்பவர் வாக்குறுதி அளித்தார். இவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
கிரேட்டர் நொய்டாவில் நாலெட்ஜ் பார்க் என்ற திட்டத்தில் வீடுகள் கட்டித் தருவதாக நம்ப வைத்து ஏராளமானோரிடம் முன்பணத்தை ஹரிந்தர் பாஷிஸ்டா வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி வீடுகள் கட்டித் தரவில்லை.
இதுகுறித்து 2022ல் சுனில் குப்தா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக நடபெற்ற விசாரணையின் அடிப்படையில் கடந்த 13ம் தேதி ஹரிந்தரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வீடு கட்டித் தருவதாக ஏராளமானோரிடம் 30 கோடி ரூபாய் வரை அவர் ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டுள்ளது.