நர்சிங் கல்லூரி மாணவிக்கு துப்பாக்கி முனையில் தொல்லை கட்டட தொழிலாளி கைது
நர்சிங் கல்லூரி மாணவிக்கு துப்பாக்கி முனையில் தொல்லை கட்டட தொழிலாளி கைது
ADDED : செப் 24, 2024 07:11 PM
ஷாஜகான்பூர்:உத்தர பிரதேசத்தில், நர்சிங் கல்லூரி மாணவியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்திய கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய அவரது கூட்டாளியை தனிப்படை போலீசார் தேடுகின்றனர்.
உ.பி., மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் ஜலாலாபாத் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த இளம்பெண், சவுக் கோட்வாலியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படிக்கிறார். இந்தக் கல்லூரியில் தற்போது பராமரிப்புப் பணிகள் நடக்கிறது. டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சுரேஷ் குமார்,35 மற்றும் அவரது உதவியாளர் கூட்டாளி அன்மோல் ஆகியோர் நேற்று முன் தினம் சென்றனர்.
கழிப்பறைக்கு வந்த ஒரு மாணவியைப் பிடித்து இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அந்த மாணவி அலறியதால், சுரேஷ் அவருடைய வாயில் துப்பாக்கியைச் சொருகி மிரட்டினார்.
இதற்கிடையில், மாணவியின் அலறல் கேட்டு கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவியர் வந்தனர். அதைப் பார்த்து சுரேஷ் மற்றும் அன்மோல் இருவரும் தப்பி ஓடினர். ஆனால் கல்லூரி ஊழியர்கள் விரட்டிச் சென்று சுரேஷை பிடித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், சுரேஷை கைது செய்தனர். இருவர் மீதும் கொலை முயற்சி மற்றும் பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பி ஓடிய அன்மோலை தனிப்படை போலீசார் தேடுகின்றனர்.