இரண்டு தொகுதிகளில் போட்டியா? அரவிந்த் கெஜ்ரிவால் மறுப்பு
இரண்டு தொகுதிகளில் போட்டியா? அரவிந்த் கெஜ்ரிவால் மறுப்பு
ADDED : ஜன 09, 2025 10:13 PM
இரண்டு தொகுதிகளில் போட்டியிடப்போவதாக வெளியான தகவலை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துள்ளார்.
கடந்த 2013 முதல் புதுடில்லியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக இந்த முறை இரண்டு முன்னாள் முதல்வர்களின் மகன்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மாவை வேட்பாளராக பா.ஜ., நிறுத்தியது. மூன்று முறை டில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தின் மகனான சந்தீபை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது.
இதனால் புதுடில்லியில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் இரண்டு தொகுதிகளில் கெஜ்ரிவால் போட்டியிடப்போவதாக பா.ஜ., தலைவர்கள் கூறி வந்தனர். இதை நிராகரித்த கெஜ்ரிவால், ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் கூறுகையில், “டில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் 'இண்டியா' கூட்டணி விவகாரம் அல்ல. புதுடில்லி தொகுதியில் இருந்து மட்டுமே தான் தேர்தலில் போட்டியிடுவேன்,” என்றார்.
- நமது நிருபர் -

