வங்கதேசத்தில் தொடரும் கலவரம்: அமித்ஷா முக்கிய ஆலோசனை
வங்கதேசத்தில் தொடரும் கலவரம்: அமித்ஷா முக்கிய ஆலோசனை
ADDED : ஆக 06, 2024 06:04 PM

டாக்கா: வங்கதேசத்தில் கலவரம் தொடரும் நிலையில், அந்நாட்டை ஒட்டிய எல்லைப் பகுதியில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். அங்கு ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளது. இருப்பினும் அங்கு வன்முறை குறைந்தபாடில்லை. கலவரம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக நேற்று மட்டும் அந்நாட்டில் பல்வேறு இடங்களில் 140 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று வன்முறையாளர்கள் ஓட்டலுக்கு தீவைத்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கலவரம் காரணமாக இந்திய எல்லைப் பகுதியில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.