எம்.எல்.ஏ.,க்கள் பாராட்டு விழாவில் பாக்., எம்.பி., பங்கேற்றதால் சர்ச்சை
எம்.எல்.ஏ.,க்கள் பாராட்டு விழாவில் பாக்., எம்.பி., பங்கேற்றதால் சர்ச்சை
ADDED : நவ 02, 2024 12:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குர்கான்: ஹரியானாவில் இந்திய தேசிய லோக் தள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பாகிஸ்தான் எம்.பி, கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்திற்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஐ.என்.எல்.டி. எனப்படும் இந்திய தேசிய லோக் தள் கட்சிக்கு ஆதித்யா சவுதாலா, அர்ஜூன் சவுதாலா என இரு எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு பெற்றனர்.
இவர்களுக்கு பாராட்டுவிழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் சிர்சா மாவட்டம் சவுதாலா கிராமத்தில் நடைபெற்றது. விழாவில் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பாகிஸ்தான் பாராளுமன்ற எம்.பி.. அப்துல் ரஹ்மான் கனோஜ் என்பவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அவர் பங்கேற்ற வீடியோ,புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.