ADDED : செப் 30, 2025 03:37 AM

லக்னோ: உ.பி.,யில் மதமாற்ற தடைச்சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் லக்னோ அருகே பக்தவுரி கேதா பகுதியைச் சேர்ந்தவர் மால்கான், 43. இவர், தன் பண்ணை வீட்டை, கிறிஸ்துவ தேவாலயமாக மாற்றியுள்ளார்.
இங்கு, வாரத்தின் இரண்டு நாட்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த பலரை மால்கான் ஒன்று திரட்டி, அவர்களுக்கு ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதாக கூறி கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இதையடுத்து மால்கானின் நடவடிக் கையை கண்காணித்த போலீசார் அவர், பட்டியலின மக்களை ஒன்றுதிரட்ட தனி, 'வாட்ஸாப்' குழுவை துவக்கி செயல்பட்டு வந்ததைகண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து மால்கானை போலீசார் கைது செய்ததுடன், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர, மால்கானின் நிதி ஆதாரங்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரிக்கின்றனர்.