ADDED : ஜூன் 13, 2025 08:34 PM
புதுடில்லி:மிக முக்கியமான பொதுமக்கள் பயன்பாடு, எரிசக்தி மற்றும் கலாசார திட்டங்களுக்கு, புதுடில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான ஒப்புதல், கார்ப்பரேஷனின் கவுன்சில் கூட்டத்தில் வழங்கப்பட்டது.
யூனிட் ஒன்றுக்கு, 4.62 ரூபாய் என்ற அளவில், 25 ஆண்டுகளுக்கு என்.எச்.பி.சி.,யிலிருந்து, 120 மெகாவாட் மின்சாரம் வாங்க, பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
அதுபோல, மின் துறையை மேம்படுத்த, 40 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கும், கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், நீர் மேலாண்மைக்காக, 30.84 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கும், கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆறுகளில் வெள்ள நீர் கட்டுப்பாடு மற்றும் பொது சுகாதார திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளத. 70.44 கோடி ரூபாய் மதிப்பில் லோதி ரோடு பகுதியில் உள்ள சுனேஹரி மதகு துார் வாரப்படும். கூடுதலாக, 5.20 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், நீர் மேலாண்மைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.