sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 த.வெ.க., ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கடும் எதிர்ப்பு

/

 த.வெ.க., ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கடும் எதிர்ப்பு

 த.வெ.க., ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கடும் எதிர்ப்பு

 த.வெ.க., ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கடும் எதிர்ப்பு

17


ADDED : ஜன 27, 2026 04:57 AM

Google News

ADDED : ஜன 27, 2026 04:57 AM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'விடுதலை சிறுத்தைகள் குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்' என, வி.சி.க.,வினர் தெரிவித்துள்ளனர்.

மாமல்லபுரத்தில் நடந்த த.வெ.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, ''வி.சி., தலைவர் திருமாவளவனுடன் இருப்பது வெறும் 20 பேர் மட்டுமே. அவரை அடியாள் போன்று தி.மு.க., நடத்துகிறது,'' என்றார்.

இதற்கு, வி.சி.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். த.வெ.க., தலைவர் விஜயும், 'தேவையில்லாமல் வி.சி.க.,வினரை ஏன் சீண்ட வேண்டும்?' என அறிவுறுத்த, ஆதவ் அர்ஜுனா நேற்று முன்தினம் இரவு, அறிக்கை வெளியிட்டார்.

அதில், 'திருமாவளவன் மீது எனக்கு மரியாதை உண்டு. வி.சி.க.,வில், தி.மு.க.,வின் குரலாக செயல்படும் 20 நபர்களை குறிப்பிட்டு தான் பேசினேன். ஆனால், என் கருத்து தவறாக சித்தரிக்கப்படுகிறது. தி.மு.க.,வின் திரிபு அரசியலில், வி.சி.க.,வினர் சிக்கி விடக்கூடாது' என தெரிவித்தார்.

ஆனாலும், வி.சி.க., வினர் 'ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால், அவர் எந்த ஊருக்கு பிரசாரத்திற்கு வந்தாலும் முற்றுகையிடுவோம். அவர் மன்னிப்பு கேட்பது, த.வெ.க.,விற்கும் நல்லது' என கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us