காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி - காங்., கூட்டணி ஆட்சி: முதல்வராகிறார் உமர் அப்துல்லா
காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி - காங்., கூட்டணி ஆட்சி: முதல்வராகிறார் உமர் அப்துல்லா
UPDATED : அக் 08, 2024 07:11 PM
ADDED : அக் 08, 2024 08:06 AM
முழு விபரம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்பார் என தெரிகிறது.பா.ஜ.,29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஜம்மு காஷ்மீரில், மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக, செப்.,18, 25 மற்றும் அக்.,1ம் தேதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. 3 கட்டங்களிலும் சேர்த்து 63.88 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பா.ஜ., மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும் களம் இறங்கின. மொத்தம் 873 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத், பா.ஜ., தலைவர் ரவீந்திர ரெய்னா உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள். தேர்தலில் பதிவான ஓட்டுக்களை 20 மையங்களில் இன்று எண்ணப்பட்டன. மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால், முக்கியத்துவம் பெற்றது.
அதில்,
தேசிய மாநாட்டு கட்சி - 42
பா.ஜ., - 29
காங்கிரஸ் -06
ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி - 03
ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி-01
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-01
ஆம் ஆத்மி-01
சுயேச்சைகள் -07 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்பார் என இவரது தந்தையும், அக்கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா அறிவித்து உள்ளார்.

