sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மேற்கு வங்கத்தில் 'இண்டியா' அணி ஏட்டிக்கு போட்டி! கூட்டணி குறித்து குழப்பமான பேச்சு

/

மேற்கு வங்கத்தில் 'இண்டியா' அணி ஏட்டிக்கு போட்டி! கூட்டணி குறித்து குழப்பமான பேச்சு

மேற்கு வங்கத்தில் 'இண்டியா' அணி ஏட்டிக்கு போட்டி! கூட்டணி குறித்து குழப்பமான பேச்சு

மேற்கு வங்கத்தில் 'இண்டியா' அணி ஏட்டிக்கு போட்டி! கூட்டணி குறித்து குழப்பமான பேச்சு


UPDATED : ஜன 24, 2024 05:25 AM

ADDED : ஜன 24, 2024 02:05 AM

Google News

UPDATED : ஜன 24, 2024 05:25 AM ADDED : ஜன 24, 2024 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: பா.ஜ.,வை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, எதிர்க்கட்சிகளின், 'இண்டியா' கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், மேற்கு வங்கத்தில் அதில் உள்ள கட்சிகள் தொடர்ந்து தங்களைத் தாங்களே விமர்சித்து வருகின்றன. தனித்துப் போட்டியிடுவதாக அவை ஏட்டிக்கு போட்டியாக அறிவித்துள்ளது, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

லோக்சபா தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக, 28 கட்சிகள் அடங்கிய, இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில், காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் ஒரு விசித்திரமான சூழ்நிலை மேற்கு வங்கத்தில் உள்ளது. மாநிலத்தில் ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக, ௩௦ ஆண்டுகளுக்கு மேலாக மோதல் போக்குடன் இருந்து வந்தது.

ஒரே கூட்டணி


மாநிலத்தில் இத்தனை ஆண்டுகளாக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராகவே, மம்தா பானர்ஜி அரசியல் செய்து வந்தார். தற்போது இந்த மூன்று கட்சிகளும் ஒரே கூட்டணியில் உள்ளன. ஆனாலும், அவர்களுக்குள்ளான முந்தைய பகை மட்டும் மறையவில்லை. தொடர்ந்து, பரஸ்பரம் விமர்சித்து வருகின்றன. மாநிலத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு, பேச்சளவுக்கே நடந்தது.

மாநிலத்தில் உள்ள, 42 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிட திரிணமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரசுக்கு வேண்டுமானால், இரண்டு தொகுதிகளை தருவதற்கு தயாராக உள்ளதாக கூறியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான, தொகுதிப் பங்கீடு குறித்து திரிணமுல் காங்., பரிசீலிக்கவே இல்லை. இது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், மம்தா பானர்ஜி, புதிய யோசனை ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

எங்களைப் போல பா.ஜ.,வுக்கு எதிராக துணிந்து நின்றவர்கள் யாரும் இல்லை. இதனால், மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.,வுக்கு எதிராக நாங்கள் களமிறங்குவோம். காங்கிரஸ், நாடு முழுதும், 300 தொகுதிகளில் தனித்து போட்டியிடலாம். அவர்கள் விரும்பினால் எங்களுடைய ஆதரவை அளிப்போம். போட்டியாக வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம்.

பா.ஜ.,வை வெல்ல வேண்டுமானால், அந்தந்த மாநிலத்தில் வலுவான கட்சிகளே அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஆனால், இதை சிலர் ஏற்க மறுக்கின்றனர். அதையும் மீறி தொகுதிகளை நாங்கள் கொடுத்து, அதை அவர்கள், பா.ஜ.,வுக்கு தாரைவார்க்க விடுவதை ஏற்க முடியாது.

கடந்த, 34 ஆண்டுகளுக்கு மேலாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக நான் போராடி வருகின்றேன். இந்த நிலையில், இண்டியா கூட்டணியில் தங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க அந்தக் கட்சிகள் முயற்சிக்கின்றன. பல அவமானங்களை சகித்து கொண்டுதான் இந்தக் கூட்டணியில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

நொண்டி சாக்கு


இதற்கு, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

''பா.ஜ.,வின் 'பி டீமாக' திரிணமுல் காங்கிரஸ் உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள ஓட்டுகளை, பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் பகிர்ந்து கொள்வதற்காக அவர் திட்டமிட்டு உள்ளார். இதற்காக ஒரு நொண்டி சாக்கு கூறுகிறார்,'' என, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் மேற்கு வங்கச் செயலர் முகமது சலிம் கூறுகையில், ''கூட்டணியில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதற்கு நாங்கள் முயற்சி செய்யவில்லை. ''தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று மம்தா விரும்புகிறார். அவருடைய கட்சிக்கு எந்த கொள்கையும் கிடையாது. அவர், பா.ஜ.,வுக்கு சவாலாக இருக்க முடியாது,'' என்றார்.

எந்த பயனும் இல்லை!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கோவில்களுக்கு போகிறார். அதனால் எந்தப் பயனும் இல்லை. நாங்கள் கோவிலுக்கும் போவோம், மசூதி, சர்ச், குருத்வாராவுக்கும் போவோம். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, சாலையில் இறங்கி நாங்கள் போராடினோம்.

- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

'நேதாஜிக்கு என்னவாயிற்று'

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின், 127வது பிறந்தநாளையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும், நேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று பா.ஜ., கூறியது. ஆனால், 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தும் எதுவும் செய்யவில்லை. நேதாஜிக்கு என்ன நடந்தது என்பது தெரியாதது, நமக்கெல்லாம் அவமானம்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us