தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு டிஜிட்டல் வரைபடம் உருவாக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு டிஜிட்டல் வரைபடம் உருவாக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு டிஜிட்டல் வரைபடம் உருவாக்கம்

1


UPDATED : நவ 10, 2026 12:00 AM

ADDED : நவ 09, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 12:00 AM ADDED : நவ 09, 2026 10:54 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தலா 800 வீடுகள் அடங்கிய 24.25 லட்சம் வீட்டுமனை தொகுப்புக்கான வரைபடம் டிஜிட்டல் முறையில் வ ரையறுக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டின், 2027ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன.

இந்த கணக்கெடுப்பு முதன்முறையாக முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றது. முதல் கட்டமாக, வீடுகளின் நிலை மற்றும் வீட்டு வசதிகள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

மணிப்பூர் மாநிலம் தவிர நாடு முழுதும் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக, மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக உருவாக்கப்பட்ட எச்.எல்.பி.சி., எனப்படும் ‘வீடுகள் கணக்கெடுப்பு தொகுதிகள் உருவாக்கம்’ என்ற இணையவழி வரைபட செயலி வாயிலாக, தலா 800 வீடுகள் அடங்கிய 24.25 தொகுப்புகளின் வரைபடம் டிஜிட்டல் முறையில் வரையறுக்கப்பட்டுள்ளன.

‘இதன் வாயிலாக, கணக்கெடுப்புக்கான விரிவான புவியியல் வரைபட கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது’ என, இந்திய தலைமை பதிவாளர் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு கமிஷனர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் தெரிவித்துள்ளார்.

இதில் உள்ள வரைபடங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதன்படியே மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்ட பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us