
* கஞ்சா விற்றவர் கைது
கோலார், -சீனிவாசப்பூர் சாலையில் உள்ள மகரிஷி பள்ளி அருகே ஆந்திர மாநிலம், புங்கனுாரின் பாகேப்பள்ளியை சேர்ந்த சீனிவாஸ், 38, என்பவர் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா விற்பனை செய்வதாக கோலார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரை போலீசார் கைது செய்து கஞ்சா, மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்தனர்.
-------
* ரூ.1.20 லட்சம் கொள்ளை
நரசாப்பூரில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி கிளையில், சோலுார் கிராமத்தைச் சேர்ந்த ராமப்பா, 75 என்பவர் 1.20 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அங்கு இருந்த ஒருவர், ராமப்பாவின் ஆடையில் சாக்கடை கழிவு பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அதை சுத்தம் செய்யுமாறு கூறி, அவரது கவனத்தை திசை திருப்பி உள்ளார்.
அவரின் ஆடையை சுத்தம் செய்ய உதவுவது போல் நாடகமாடி பணத்தை பறித்துக் கொண்டு தலைமறைவானார். ராமப்பா, புகாரின்படி, வேம்கல் போலீசார் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
-------
* 26 பேர் காயம்
துமகூரு, நந்திஹள்ளி தாலுகாவில், நேற்று கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணியரை ஏற்றி சென்றது. அப்போது, பஸ்சிற்கு முன்பு சென்று கொண்டிருந்த லாரி திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், அரசு பஸ் மீது லாரி மீது மோதியது. இதில் பஸ்சில் இருந்த 26 பேருக்கு காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-------
* தங்க சங்கிலி மீட்பு
சென்னப்பட்டணாவில் உள்ள கன்னிடோடி கிராமத்தை சேர்ந்தவர் கங்கம்மா, 59. சில தினங்களுக்கு முன், இவரது தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துவிட்டு சென்றனர். இது குறித்து போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் செயின் பறிப்பில் ஈடுப்பட பிரமோத், 27, அபிஷேக், 24, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க சங்கிலியை மீட்டு, கங்கம்மாவிடம் ஒப்படைத்தனர்.
------
* கரை ஒதுங்கிய உடல்
சத்தீஸ்கரை சேர்ந்தவர் தீபக், 29. இவர் ராம்நகர், கனகபுராவில் உள்ள சுஞ்சி நீர்வீழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை குளித்தார். அப்போது, நீரின் வேகத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அவரை கடந்த சில நாட்களாக தீயணைப்பு வீரர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் அவரது உடல் நேற்று முன்தினம் கரை ஒதுங்கியது.
-------
* தங்க செயின் பறிப்பு
கோலார் மாவட்டம், முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் புஷ்பவதி, 30. இவர் பெரும்பாலும் வீட்டில் தனியாக இருப்பதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில், நேற்று புஷ்பவதி வீட்டில் தனியாக இருக்கும் நேரம் பார்த்து, மர்ம நபர்கள் இருவர் வீடு புகுந்து, அவர் கழுத்தில் இருந்து நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.
-------
* இளம்பெண் தற்கொலை
ஹாவேரி, கார்ஜகி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் பீபிஜான் சொண்டி, 18. இவர் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதை தெரிந்த இவரது பெற்றோர் புகை பிடிக்க கூடாது என கண்டித்து உள்ளனர். இதனால், மனமுடைந்து போனவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.
------
* பாடகர் தற்கொலை
ஒடிசாவை சேர்ந்த ராப் பாடகர் அபினவ் சிங், 31. இவர் பெங்களூரு, காடுபீசனஹள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கும். நேற்று அபினவ் சிங் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அவரது மனைவியே காரணம் என்று அபினவின் வீட்டார் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து மாரத்தஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
***