பிரதமர் மோடியை விமர்சிப்பதா? கார்கேவுக்கு லெஹர்சிங் கண்டனம்!
பிரதமர் மோடியை விமர்சிப்பதா? கார்கேவுக்கு லெஹர்சிங் கண்டனம்!
ADDED : நவ 03, 2024 11:40 PM

பெங்களூரு; 'பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பதை விட்டு விட்டு, உங்கள் குடும்பத்தினர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து பேசுங்கள்' என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, பா.ஜ., ராஜ்யசபா உறுப்பினர் லெஹர்சிங் சிரோயா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று அவர் கூறியிருப்பதாவது:
மல்லிகார்ஜுன கார்கே குடும்பத்தினருக்கு சொந்தமான சித்தார்த் விஹார் டிரஸ்ட் மீது, நில அபகரிப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் கார்கே, இதை பற்றி பேசாமல் பிரதமர் நரேந்திர மோடி பற்றி விமர்சிக்கிறார். இது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.
கார்கே குடும்பம் தலைமையிலான சித்தார்த் விஹார் டிரஸ்டுக்கு அளிக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை, சத்தமில்லாமல் கே.ஐ.ஏ.டி.பி.,யிடம் திருப்ப கொடுத்ததன் மூலம், முறைகேடு செய்துள்ளதை மறைமுகமான ஒப்புக்கொண்டார்.
கர்நாடக காங்கிரசில் ஏற்பட்டுள்ள விரிசலை, சரி செய்ய முயற்சிக்கும் அவசரத்தில், வாக்குறுதி திட்டங்களால் ஏற்படும் பிரச்னைகளை பற்றி, கார்கே விவரித்துள்ளார். அபூர்வமாக உண்மையை கூறியுள்ளார்.
விரிசலை சரி செய்ய முயற்சித்து, கட்சிக்கு மேலும் சேதத்தை ஏற்படுத்தியதை, கார்கே உணர்ந்திருக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, வேணுகோபால், ஹரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, இவர்களுக்கு ஆதரவாக நின்று, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தார். ஆனால் இந்த தலைவர்கள், கார்கே குடும்பத்தினர் மீது எழுந்த நில அபகரிப்பு குற்றச்சாட்டு குறித்து, கேள்வி எழுப்பாதது ஏன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.