ADDED : பிப் 26, 2025 12:19 AM
உடுப்பி;
'மாஜி' நக்சல்களுக்கு கஸ்டடி
சிக்கமகளூரின் முன்டகார் லதா, வனஜாக்ஷி, தட்சிண கன்னடாவின் சுந்தரி, தமிழகத்தின் வசந்த் என்ற ரமேஷ், கேரளாவின் ஜீஷா, ஆந்திராவின் ஜெயண்ணா என்ற மாரப்பா அரோலி ஆகிய ஆறு பேர், நக்சல் செயல்பாட்டில் ஈடுபட்டனர். இவர்கள் நான்கு மாநிலங்களின் போலீசாரால் தேடப்பட்டு வந்தனர்.
தாங்களாக முன் வந்து சரண் அடைந்தால், நக்சல்களுக்கு மறு வாழ்வு ஏற்படுத்தி தருவதாக, முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்தார். இதன்படி ஆறு பேரும் கடந்த மாதம், முதல்வரின் முன்னிலையில் சரண் அடைந்தனர்.
இதில் முன்டகார் லதா, வனஜாக்ஷி, சுந்தரி, ஜெயண்ணா ஆகிய நான்கு பேர் உடுப்பி, கார்கலாவின் ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். பாக்கியுள்ள வழக்குகள் பற்றி விசாரிக்க வேண்டியுள்ளதால், தங்கள் கஸ்டடியில் ஒப்படைக்கும்படி போலீசார் கோரினர். நீதிமன்றமும், நான்கு முன்னாள் நக்சல்களை, மூன்று நாட்களுக்கு போலீஸ் கஸ்டடிக்கு ஒப்படைத்துள்ளது.