ADDED : செப் 21, 2024 11:25 PM
ஷிவமொகா: வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்த வங்கி ஊழியர், தற்கொலை செய்து கொண்டார்.
ஷிவமொகா, தீர்த்தஹள்ளியின், அரகா கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில், 35. இவர் எடூரில் உள்ள கனரா வங்கியில், அதிகாரியாக பணியாற்றினார்.
இவர், வங்கியின் எட்டு கணக்குகளில் வாடிக்கையாளர்கள் டிபாசிட் செய்திருந்த, ஒரு கோடி ரூபாயை தன் கணக்குக்கு மாற்றி, மோசடி செய்தார்.
இதுதொடர்பாக, 2023 டிசம்பரில் தீர்த்தஹள்ளி நகர போலீஸ் நிலையத்தில், வங்கி அதிகாரிகள் புகார் செய்தனர். சுனில் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
ஜாமினில் வெளியே வந்தார். அதன்பின் ஆன்லைன் தொழிலில் ஈடுபட்டு, பணத்தை இழந்தார்.
மனம் நொந்த அவர், இரண்டு நாட்களுக்கு முன்பு, விஷம் குடித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார்.
தீர்த்தஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.