உயிர்காக்கும் 36 மருந்துகளுக்கு சுங்க வரி முழுமையாக ரத்து
உயிர்காக்கும் 36 மருந்துகளுக்கு சுங்க வரி முழுமையாக ரத்து
ADDED : பிப் 01, 2025 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புற்றுநோய், அரிய நோய்கள், கடுமையான நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருந்துகளில், ஏற்கனவே சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டவற்றுடன், மேலும் 36 மருந்துகள் சேர்க்கப்படுகின்றன. 5 சதவீத சலுகை வழங்கும் சுங்க வரி பட்டியலில், ஆறு மருந்துகள் சேர்க்கப்படும்.
இந்த மருந்துகளை தயாரிக்க செய்ய பயன்படுத்தப்படும் மொத்த மருந்துகளுக்கும் முழு விலக்கு மற்றும் சலுகை வரி பொருந்தும்.
மருந்து நிறுவனங்களால் நடத்தப்படும் நோயாளி உதவித் திட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகள், நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டால், அவற்றிற்கும் சுங்க வரியில் இருந்து முழுவிலக்கு அளிக்கப்படும்.
நோயாளிகளுக்கான 13 உதவி புதிய திட்டங்களுடன், கூடுதலாக 37 மருந்துகள் சேர்க்கப்படும்.