டில்லியில் கெஜ்ரிவால் வசித்த சொகுசு பங்களா கட்டியதில் விதிமீறலா: விசாரணைக்கு சிவிசி உத்தரவு
டில்லியில் கெஜ்ரிவால் வசித்த சொகுசு பங்களா கட்டியதில் விதிமீறலா: விசாரணைக்கு சிவிசி உத்தரவு
UPDATED : பிப் 15, 2025 01:36 PM
ADDED : பிப் 15, 2025 01:08 PM

புதுடில்லி: டில்லியில் கெஜ்ரிவால் வசித்த சொகுசு பங்களா கட்டியதில் விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தும்படி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்(சிவிசி) உத்தரவிட்டு உள்ளது.
கெஜ்ரிவால் டில்லி முதல்வராக பதவி வகித்த போது, சிவில் லைன் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் வசித்தார். இந்த பங்களாவில் ரூ.45 கோடி செலவு செய்து புனரமைப்பு பணிகளை அவர் மேற்கொண்டதாக துவக்கத்தில் இருந்தே பா.ஜ.,வினர் குற்றம்சாட்டி வந்தனர். டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்தது.இந்த பங்களாவில் பா.ஜ., சார்பில் முதல்வராக பதவியற்பவர் வசிக்க மாட்டார் என அக்கட்சி அறிவித்து உள்ளது.
இந்த பங்களா கட்டியதில் முறைகேடு நடந்ததாக, மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் டில்லி பா.ஜ., தலைவர் புகார் மனு அளித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த பங்களா தொடர்பாக ஆய்வு நடத்திய மத்திய பொதுப்பணித்துறை ஆய்வு செய்த அறிக்கையைத் தொடர்ந்து, விசாரணைக்கு சிவிசி உத்தரவிட்டு உள்ளது. இந்த பங்களா கட்டியதில் விதிமுறைகள் உள்ளதா என்பதை விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு உள்ளது.