சைபர் தாக்குதலில் முடங்கியது உத்தர்க்கண்ட் அரசு மின் ஆளுமை நிர்வாகம்
சைபர் தாக்குதலில் முடங்கியது உத்தர்க்கண்ட் அரசு மின் ஆளுமை நிர்வாகம்
ADDED : அக் 05, 2024 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டேராடூன்: உத்தர்க்கண்ட் மாநில அரசு இணைய தளங்கள் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடைபெற்றதால், அம்மாநில அரசின் ஒட்டு மொத்த தகவல் தொழில்நுட்ப நிர்வாகமும் ஸ்தம்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர்கண்ட் அரசின் அனைத்து துறைகளின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் கணினி மயமாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி அரசு இணைய தளங்கள் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடந்தது. இதனால் ஒட்டு மொத்த தகவல் தொழில் நுட்ப நிர்வாகம் ஸ்தம்பித்தது. அரசு சேவைகள் குறிப்பாக முதல்வர் உதவி மையம், மற்றும் பதிவுத்துறை உள்ளிட்ட அனைத்து இ சேவை மையங்கள் முடங்கின.
இதனால் அரசு இயந்திரம் முடங்கியது . இதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.