ADDED : டிச 09, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி: உத்தரகன்னடா, அங்கோலாவின் தொழிலதிபர் நாயக், 2013ல் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில், பிரபல தாதா ராஜேந்திர குமார் என்ற பன்னஞ்சே ராஜா உட்பட, அவரது கூட்டாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த 8 பேருக்கும், பெலகாவி மாவட்ட நீதிமன்றம், 2022 ஏப்ரல் 5ல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பெலகாவி ஹிண்டல்கா சிறையில், தண்டனை அனுபவிக்கின்றனர்.
இவரது கூட்டாளி இஸ்மாயில், இதய பிரச்னையால் அவதிப் பட்டார். சில நாட்களுக்கு முன், சிறையில் மயங்கி விழுந்ததால், பெல காவி மாவட்ட அரசு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டு, நேற்று உயிரிழந்தார்.