ADDED : பிப் 19, 2025 06:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முசாபர்நகர்:உத்தர பிரதேசத்தில் பட்டியல் இன வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
உ.பி., மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஷாதாபர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமித் வால்மீகி,35. பட்டியல் இனத்தைச் சேர்ந்த வால்மீகி நேற்று, கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுக் கிடந்தார்.
போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வால்மீகி குடும்பத்தினர் அளித்த புகார்படி கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
சாவிந்தர் என்பவர் வால்மீகியை கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஷாதாபர் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது..

