முடிதிருத்தம் செய்ய மறுப்பு தலித் சங்கத்தினர் போராட்டம்
முடிதிருத்தம் செய்ய மறுப்பு தலித் சங்கத்தினர் போராட்டம்
ADDED : பிப் 20, 2024 07:00 AM

பெங்களூரு: தொட்டபல்லாபூரில் தலித் இளைஞருக்கு முடித்திருத்தம் செய்ய மறுத்ததைக் கண்டித்து, கடைக்குள்ளும், வெளியேயும் தலித் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
தொட்டபல்லாபூரின் கடனுார் கிராமத்தில் நேற்று காலை முடித்திருத்தம் செய்ய சில இளைஞர்கள் சென்றனர். ஆனால் கடை உரிமையாளர்கள், அவர்களுக்கு முடித்திருத்தம் செய்ய மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக, தலித் சங்கர்ஷ சமிதி உட்பட பல அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு நுாற்றுக்கும் அதிகமானோர் வந்தனர். கடைக்குள்ளும், கடைக்கு வெளியேயும் நின்றும், போராட்டம் நடத்தினர்.
சங்கத்தினர் கூறுகையில், 'நாம் 21ம் நுாற்றாண்டில் வாழ்ந்தாலும், இன்னும் தீண்டாமை உயிர்ப்புடன் உள்ளது.
மனிதநேயம் மறந்து செயல்படுகின்றனர். சமூகத்தின் ஜாதி வெறி இன்னும் உயிர்ப்புடன் இருப்பது வெட்கக்கேடானது' என்றனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த சமூக நலத்துறை அதிகாரிகளிடம், தலித் சங்கத்தினர் முறையிட்டனர்.
இதையடுத்து, தலித் இளைஞர்களுக்கு முடித்திருத்தம் செய்யப்பட்டது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

