ADDED : அக் 11, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராம்நகர்: குடும்ப பிரச்னையால், மனம் நொந்து மாட்டு கொட்டகையில் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
ராம்நகர், சென்னப்பட்டணாவின் கர்லஹள்ளி கிராமத்தில் வசித்தவர் ராஜு, 34. இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன், லட்சுமி, 30 என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
தம்பதி பல இடங்களில் கடன் வாங்கியிருந்தனர். இதை அடைக்க முடியாமல் அவதிப்பட்டனர். கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனம் நொந்த தம்பதி, நேற்று காலையில், தங்கள் வீட்டு மாட்டு கொட்டகையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அக்கூர் போலீசார், தம்பதி உடல்களை மீட்டு விசாரணையை துவக்கினர்.