'முடா'வுக்கு சிறப்பு அதிகாரம் தனி சட்டம் கொண்டுவர முடிவு
'முடா'வுக்கு சிறப்பு அதிகாரம் தனி சட்டம் கொண்டுவர முடிவு
ADDED : டிச 14, 2024 04:12 AM
பெலகாவி: பெலகாவி சுவர்ண விதான்சவுதாவில், நேற்றிரவு முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் 'முடா' சுதந்திரமாக செயல்படும் வகையில் தனி சட்டம் அமல்படுத்த, அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வரும் வாரம் சட்டசபையில் சட்டம் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
தற்போது வரை நகர மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 'முடா', மைசூரு நகர மேம்பாட்டு ஆணையசட்டம் - 1987ன் கீழ் உருவாக்கப்பட்டது.
தற்போது பி.டி.ஏ., போன்று, 'முடா'வுக்கும் தனி சட்டம் கொண்டு வரப்படுகிறது. வரும் நாட்களில் புதிய சட்டத்தின் கீழ் தனித்து செயல்படும். மனை வழங்குவது, வரைபடத்துக்கு அனுமதி அளிப்பது என, அனைத்தும் இந்த சட்டத்தின்படி நடக்கும்.
பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர மேம்பாட்டு ஆணையம், இதற்கு முன்பு நகர மேம்பாட்டுத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது.
பெங்களூரு நகர் நாளுக்கு நாள் விரிவடைவதால், நகரில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, பெரும் சவாலாக உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, பி.டி.ஏ.,வுக்கு தனி சட்டம் வகுக்கப்பட்டது; சுதந்திரமாக செயல்படுகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.