ரேபரேலியை மகளுக்கு விட்டு கொடுக்க முடிவு: ராஜ்யசபா எம்.பி.யாகிறார் சோனியா
ரேபரேலியை மகளுக்கு விட்டு கொடுக்க முடிவு: ராஜ்யசபா எம்.பி.யாகிறார் சோனியா
ADDED : பிப் 12, 2024 06:38 PM

புதுடில்லி: காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு காங்., மூத்த தலைவர் சோனியா போட்டியிட முடிவு செய்து தனது ரேபரேலி தொகுதியை மகள் பிரியங்காவுக்கு விட்டு கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் ஓரிரு மாதங்களில் (2024) லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே ‛‛இண்டியா'' கூட்டணியில் தேசிய கட்சியான காங்., இடம் பெற்றுள்ளது. பா.ஜ., தலைமையில் தே.ஜ.,கூட்டணி தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் இண்டியா கூட்டணியில் சில தோழமை கட்சிகள் வெளியேறி வருகின்றன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்.,மூத்த தலைவர் சோனியா, ராஜ்யாசபா எம்.பி., தேர்தலில் ஏதாவது ஒருமாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக போட்டியிடவும், இம்முறை தனது லோக்சபா தொகுதியான ரேபரேலியை மகள் பிரியாங்காவிற்காக விட்டு கொடுத்து அவரை போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டராங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் வரப்போகும் லோக்சபா தேர்தலில் சோனியா போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
முன்னதாக கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தனது அமேதி தொகுதியை விட்டு வெளியேறிய ராகுல், கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். இம்முறை அதே தொகுதியில் களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

