ADDED : ஜன 29, 2024 11:04 PM

தங்கவயல்: தெரு நாய்கள் கடித்து குதறியதில் மான் இறந்தது.
தங்கவயலில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. ராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன்பேட்டை, சொர்ணா நகர், உரிகம் பேட்டை, சுரங்க குடியிருப்பு பகுதிகள், பெமல் ஆலமரம், ஆர் அண்டு டி., டிவிஷன் ஹெச்.பி. நகர், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் தெருநாய்கள் அதிகரித்துள்ளன.
இதை கட்டுப் படுத்த நகராட்சியில் ஏ.பி.சி., எனும் 'அனிமல் பர்த் கன்ட்ரோல்' செய்ய 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்குவதாக ஓராண்டுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆனால் திட்டத்தை அமல்படுத்தவில்லை.
பெமல் ஹெச் அண்ட் பி., டிவிஷன் பின்புறம் மான்களின் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன. இவை, அங்கிருந்து பாலகாடு லைன், கிருஷ்ணாபுரம், டி.கே.ஹள்ளி, தொட்ட சின்னஹள்ளி, அஜ்ஜப்பன ஹள்ளி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர், தீவனங்களை தேடி வருகிறது.
இதனால், சில மான்கள், விபத்தில் சிக்கி பலியாகிறது. தெருநாய்களின் கடிக்கும் இரையாகி விடுகிறது. மான்களுக்கு, வனத் துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் கோரி வருகின்றனர்.
நேற்று, கிருஷ்ணாபுரம் பகுதியில் மான் ஒன்றை தெருநாய்கள் கடித்துக் கொன்றது. இது பற்றிய தகவல் அறிந்த வனவிலங்குகளின் பாதுகாப்பு குரல் அமைப்பின் தலைவர் ஸ்னேக் ராஜா, இறந்த மான் உடலை வனத் துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.