ADDED : ஜன 29, 2024 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷிவமொகா: சிமென்ட் மான் சிலை மீதிருந்து விழுந்து, 6 வயது சிறுமி பலியானார்.
ஷிவமொகாவின், முத்தினகொப்பலு கிராமத்தில் வசித்தவர் சமீக்ஷா, 6. இவர் பள்ளி விடுமுறை நாட்களில், வீட்டின் அருகில் உள்ள ட்ரீ பார்க்குக்கு விளையாட வருவது வழக்கம். நேற்று ஞாயிறு என்பதால், மாலையில் தன் பெற்றோருடன் பூங்காவுக்கு வந்தார்.
பூங்காவில் சிமென்டால் உருவாக்கப்பட்ட விலங்குகளின் சிலைகள் உள்ளன. மான் சிலை மீது சிறுமி ஏறி அமர்ந்து விளையாடும் போது, பாரம் தாங்காமல், சிலை இடிந்து விழுந்தது. இதில் கீழே விழுந்த சிறுமி, காயமடைந்து உயிரிழந்தார்.
கும்சி போலீசார் விசாரிக்கின்றனர்.