ADDED : டிச 21, 2025 11:55 PM

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இருந்து மஹாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதன் மூலம், இரண்டாவது முறையாக அவர் கொல்லப்பட்டுஉள்ளார். கடுமையான குறைபாடுகள் உள்ள இச்சட்டத்தின் பெயர், ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட ஹிந்தி வார்த்தைகள் மட்டுமே. இதை, அமைச்சர்களே புரிந்து கொள்ள சிரமப்படுவர்.
சிதம்பரம் ராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்
ஊக்குவிக்கும் அதிகாரப்போக்கு!
பா.ஜ., அரசு, 'ஒரே நாடு; ஒரே தொழிலதிபர்' என்ற கொள்கையை செயல்படுத்த முயல்கிறது. இது, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வில் அதிகாரப்போக்கை ஊக்குவிக்கிறது. கட்சிக்கு நிதி திரட்ட ஏதுவாக, ஒரு சில தொழிலதிபர்களின் கைகளில் வணிகங்களை குவிக்க மத்திய அரசு விரும்புகிறது.
அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி
ஏற்றுக்கொள்ள முடியாது!
மத்திய அரசின் புதிய சட்டத்தில், மஹாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது; இச்சட்டத்தின் மூலம் எந்த வேலைவாய்ப்பு உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. இச்சட்டத்திற்கு எதிராக, வரும் நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவர்.
சுப்ரியா ஸ்ரீநாத் செய்தித்தொடர்பாளர், காங்.,

