UPDATED : பிப் 09, 2025 02:47 PM
ADDED : பிப் 09, 2025 02:36 PM

புதுடில்லி: டில்லி சட்டசபைக்கு 96 பெண்கள் போட்டியிட்ட நிலையில் ஐந்து பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
டில்லி சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடந்தது. நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ., ஆட்சியை பிடித்து உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 96 பேர் பெண்கள். பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி சார்பில் தலா 9 பேர் போட்டியிட்டனர். காங்கிரஸ் தன் பங்கிற்கு 7 பேரை களமிறக்கியது. இந்த மூன்று கட்சிகளும் 2020 தேர்தலை விட இம்முறை கூடுதலாக பெண் வேட்பாளர்களை களமிறக்கி இருந்தது.
தேர்தலில் மொத்தம் பதிவான 72.36 லட்சம் ஓட்டுகளில் 44.08 லட்சம் பேர் பெண்கள். இது 60.9 சதவீதம் ஆகும். டில்லி தேர்தல் வரலாற்றில் இது அதிகம் என தெரிய வந்துள்ளது.
இந்த தேர்தலில் 96 பெண்கள் மட்டுமே ஐந்து பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
அதில்,
1. கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட ஆம் ஆத்மியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அதிஷி
2.நஜாப்கார்க் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.,வின் நீலம் பஹெல்வான்
3. ஷாலிமார் பாக் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.,வின் ரேகா குப்தா
4. வஜீர்பூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.,வின் பூனம் ஷர்மா
5. கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.,வின் ஷகா ராய் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
1993 முதல் முதல் தற்போது வரை நடந்த சட்டசபை தேர்தலில் 44 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக 1998 ல் 9 பெண்கள் வெற்றி பெற்றனர்.
1993 ல் 3
2003ல் 7
2008, 2013ல் தலா 3
2015 ல் 6
2020ல் 8 பெண்கள் வெற்றி பெற்று இருந்தனர்.
அதேபோல் டில்லி வரலாற்றில் 3 பெண்கள் முதல்வராக பதவி வகித்து உள்ளனர்.
இப்பட்டியலில்பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் 1998 லும்,
காங்கிரசின் ஷீலா தீக்சித் 1998 முதல் 2013 வரையிலும்( நீண்ட காலம் முதல்வர் பதவியில் இருந்தவர் என்ற பெருமை பெற்றவர்)
ஆம் ஆத்மியின் அதிஷி( டில்லியின் இளம் வயது முதல்வர் என்ற பெருமை பெற்றவர்) ஆகியோர் இடம்பிடித்து உள்ளனர்.