டில்லி குண்டு வெடிப்பு சம்பவம்: காஷ்மீர் வனப்பகுதியில் என்ஐஏ சோதனை
டில்லி குண்டு வெடிப்பு சம்பவம்: காஷ்மீர் வனப்பகுதியில் என்ஐஏ சோதனை
ADDED : டிச 09, 2025 12:09 PM

புதுடில்லி: டில்லி குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, ஜம்மு - காஷ்மீர், அனந்த்நாக் மாவட்ட வனப்பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டில்லியின் செங்கோட்டை பகுதியில், கடந்த நவம்பர் 10ம் தேதி புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க என்ஐஏ அதிகாரிகள் விடா முயற்சியாக உள்ளனர். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவத்தில், விசாரணையின் மையப்புள்ளியாக அல் பலாஹ் பல்கலை உள்ளது. காரை ஓட்டி சென்ற உமர் நபி புல்வாமாவை சேர்ந்தவர் என்பதால் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இன்று (டிசம்பர் 9) அனந்த்நாக் மாவட்ட வனப்பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

