டில்லி முதல்வரின் அரசு மாளிகை புதுப்பிக்கும் டெண்டர் : ரத்து செய்தது பொதுப்பணித்துறை
டில்லி முதல்வரின் அரசு மாளிகை புதுப்பிக்கும் டெண்டர் : ரத்து செய்தது பொதுப்பணித்துறை
ADDED : ஜூலை 09, 2025 08:11 PM

புதுடில்லி:டில்லி முதல்வர் ரேகா குப்தாவின் அரசு மாளிகை புதுப்பித்தலுக்காக வழங்கப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்பீடு டெண்டரை நிர்வாக காரணங்களுக்காக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரத்து செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
டில்லி முதல்வராக பிப்ரவரியில் பதவியேற்ற முதல்வர் ரேகா குப்தாவுக்கு, ஜூன் மாதம் ராஜ் நிவாஸ் மார்க்கில் உள்ள மாளிகை எண் 1, டைப்-7 மாளிகை ஒதுக்கப்பட்டது.
மேலும் மாளிகையை புதுப்பிக்க ரூ.60 லட்சம் மதிப்புள்ள டெண்டர் கோர ஜூலை 4 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது.
டெண்டர் கோரப்பட்டதற்கு ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் திட்டமிடப்பட்ட செலவினங்களை கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் இந்த வேலை ஒரு ஆடம்பர இன்பம் இல்லை, ஆனால் வழக்கமான அரசு நடைமுறைகளின் ஒரு பகுதி என்று பா.ஜ., தெரிவித்தது.
இந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக, அரசு மாளிகை புதுப்பித்தலுக்காக வழங்கப்பட்ட ரூ.60 லட்சம் டெண்டரை,ஜூலை 7 ஆம் தேதி ரத்து செய்ததாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.