UPDATED : ஜன 17, 2024 11:08 AM
ADDED : ஜன 17, 2024 11:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பஞ்சாப், ஹரியானா, டில்லி, சண்டிகர் உள்ளிட்ட வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பனிமூட்டம் காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
டில்லியில் இன்று (ஜன.,17) காலை வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்ததால் கடும் குளிர் நிலவியது. டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கிளம்ப வேண்டிய 120 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. 53 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் அவதி அடைந்தனர்.
அதேபோல் டில்லியில் இருந்து 20க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. டில்லி விமான நிலையத்தில் வழக்கமான நேரத்தை விட, 170க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்தன.

