ADDED : ஜன 05, 2025 11:07 PM

பிரதமர் மோடி, தற்போது துவக்கி வைக்கும் டில்லி தொடர்பான திட்டங்கள் அனைத்தும், மத்திய - மாநில அரசின் பங்களிப்பு உடையவை. ஆம் ஆத்மி எப்போதும் மத்திய அரசுடன் சண்டை போடுகிறது என்பவர்களுக்கு இந்த திட்டங்களே பதில். கடந்த 10 ஆண்டுகளாக டில்லியை சிறப்பாக வைத்திருக்கிறோம்.
அரவிந்த் கெஜ்ரிவால், ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மி
தேசவிரோத சக்திகளிடம் உஷார்!
தேசிய மாணவர் படை, தேசியவாதம் மற்றும் தேசமே முதன்மை எனும் அணுகுமுறையை ஊக்குவிக்கிறது. நம் நாட்டின் இளைஞர்கள் தேச விரோத சக்திகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும். அதுவே நம் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கும். அது நம் தாய்நாட்டுக்கு செய்யும் மரியாதையும் கூட.
ஜக்தீப் தன்கர், துணை ஜனாதிபதி
தவறு செய்து விட்டேன்!
எங்களுக்கு முன் ஆட்சியில் இருந்த லாலு பிரசாத் யாதவ் பீஹாருக்கு ஏதாவது செய்தாரா? அப்போது, சூரியன் மறைந்த பின் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறவே பயந்தனர். லாலு கட்சியுடன் நான் இரண்டு முறை கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டேன். மீண்டும் அது நடக்காது.
நிதிஷ் குமார், பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்

