sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி முதல்வர் ரேகா குப்தா; இன்று பதவி ஏற்பு!

/

டில்லி முதல்வர் ரேகா குப்தா; இன்று பதவி ஏற்பு!

டில்லி முதல்வர் ரேகா குப்தா; இன்று பதவி ஏற்பு!

டில்லி முதல்வர் ரேகா குப்தா; இன்று பதவி ஏற்பு!

12


UPDATED : பிப் 20, 2025 06:33 AM

ADDED : பிப் 19, 2025 08:15 PM

Google News

UPDATED : பிப் 20, 2025 06:33 AM ADDED : பிப் 19, 2025 08:15 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு பிப்.5ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் 48 தொகுதிகளில் பா.ஜ., வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.

27 ஆண்டுகள் கழித்து ஆட்சியை கைப்பற்றிய பா.ஜ.,வில் அடுத்த முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலே தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பும் எழுந்திருந்தது.

இதையடுத்து, முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான ரவிசங்கர் பிரசாத், தேசியச் செயலாளர் ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரை பா.ஜ.,மேலிடம் நியமித்தது. அதை தொடர்ந்து முதல்வரை தேர்வு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் டில்லியில் இன்று (பிப்.19) நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர், யார் முதல்வர் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பார் என்று பா.ஜ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பா.ஜ.க., எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்த முதல்வர் பெயரை துணை நிலை கவர்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க உள்ளார். அவரது ஒப்புதலுக்கு பின்னர், முதல்வர், இன்னபிற அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.

முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரேகா குப்தா, ஷாலிமர்பாக் தொகுதியில் வெற்றி பெற்றவர். பதவியேற்பு விழா, இன்று (பிப்.20) நண்பகல் 12.35 மணியளவில் ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது.

விழாவில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள்,பிற மாநில பா.ஜ., தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். பதவியேற்பு விழாவை முன்னிட்டு தலைநகர் டில்லியில் 25,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர்.

யார் இந்த ரேகா குப்தா?

முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ரேகா குப்தா நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். கல்லூரி காலம் தொட்டே தீவிர அரசியலில் இறங்கியவர். நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில் ஷாலிமர் பாக் தொகுதியில் வென்றவர். அடிப்படையில் வக்கீலான ரேகா குப்தா, டில்லி பல்கலை. மாணவர் தலைவராக பணியாற்றியவர். 2007ல் உள்ளாட்சி தேர்தலில் கால் பதித்து உத்தரி பிதாம்புரா கவுன்சிலராக வென்றார். தெற்கு டில்லியின் மேயராகவும் முத்திரை பதித்தவர். தேசிய மகளிரணி துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். தற்போது டில்லி பா.ஜ., பொதுச் செயலாளராக உள்ளார்.








      Dinamalar
      Follow us