டில்லி - குப்பை பொறுக்கும் நபர் குத்தி கொலை கொன்றவர்களில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
டில்லி - குப்பை பொறுக்கும் நபர் குத்தி கொலை கொன்றவர்களில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
ADDED : ஜூன் 10, 2025 09:13 PM
புதுடில்லி:குப்பை பொறுக்கும் இளைஞர், சக இளைஞர்களால் கத்திரி கோலால் குத்தி கொலை செய்யப்பட்டார். மொபைல் போனை விற்று தின்று விட்டதாக கூறி, அந்த இளைஞரை இருவர் குத்தி கொன்றனர்.
மத்திய டில்லி பகுதியில் குப்பை பொறுக்குவதை தொழிலாக கொண்டிருந்தவர்கள், சாகர், 25, ரோஷன், 23, மற்றும் நிதேஷ், 21. மூவரும் நண்பர்கள். குப்பை பொறுக்குவதன் வாயிலாக கிடைத்த பணத்தில் மூவரும் அவ்வப்போது கஞ்சா புகைப்பது வழக்கம்.அப்படி சில நாட்களுக்கு முன், மூவரும் கஞ்சா புகைத்த போது, சகோதரர்களான ரோஷன், நிதேஷ் வைத்திருந்த மொபைல் போனை, சாகர் திருடியதாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் தங்கள் மொபைல் போனை அந்த இளைஞரிடம் கேட்ட போது, விற்று தின்றது தெரிந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் காலையில், மத்திய டில்லி பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மூவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில், இரு சகோதர்களும் சேர்ந்து, சக நண்பர்கள் இருவரை கத்திரிக்கோலால் குத்திக் கொன்றனர்.
முன்னதாக, ரோஷன் பிடித்துக் கொள்ள நிதேஷ், கத்திரிக்கோல், ஊசி போன்றவற்றால், அந்த இளைஞரை குத்தி கொலை செய்தார். அவர் உடலை அங்கேயே வீசி சென்றனர். போலீசார் அங்கு சென்று, சாகரின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
இந்த பயங்கர கொலை தொடர்பாக, ரோஷன் கைது செய்யப்பட்டார். தலைமறைவான நிதேஷை போலீசார் தேடி வருகின்றனர்.