எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்; 10 பேரை கைது செய்தது டில்லி போலீஸ்
எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்; 10 பேரை கைது செய்தது டில்லி போலீஸ்
ADDED : ஏப் 19, 2025 08:04 PM

புதுடில்லி: ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுடன் தொடர்புடைய எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 10 பேரை டில்லி போலீசார் கைது செய்தனர்.
எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருவதாக டில்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி டில்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுடன் தொடர்புடைய எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 1667 கிராம் ஹெராயின் உட்பட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 16 மொபைல் போன்கள் மீட்கப்பட்டன.
ரூ 10 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மற்றும் டில்லியில் போதைப்பொருட்களை சப்ளை செய்து வந்தனர். கடத்தல் கும்பலின் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர்.
டில்லி போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் கையும், களவுமாக சிக்கி உள்ளது.