தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/டில்லி உஷ்...

டில்லி உஷ்...

டில்லி உஷ்...


UPDATED : நவ 15, 2026 12:00 AM

ADDED : நவ 14, 2026 03:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 12:00 AM ADDED : நவ 14, 2026 03:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மன்னிப்பு?

டில்லியில் இப்போது மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயம், காங்., – பார்லி., குழு தலைவர் சோனியாவின் சுயசரிதை புத்தகம் தான். கடந்த, 10ல் வெளியான இந்த புத்தகம் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. மொத்தம், 544 பக்கங்களை உடைய இந்த சுயசரிதையில், 55 தவறுகள் உள்ளன. பல நிகழ்வுகளின் தேதிகள் தவறாக எழுதப்பட்டுள்ளன. பார்லி.,க்கு எப்படி ராஜ்யசபா எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதை தவறாக எழுதியுள்ளார் சோனியா. ‘இது கூட தெரியாமல் இத்தனை ஆண்டுகள் எம்.பி.,யாக இருந்துள்ளார் சோனியா’ என, விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

காங்கிரசிலிருந்து ஜனாதிபதியான கே.ஆர்.நாராயணன் பெயரை, ஆர்.கே.நாராயணன் என, எழுதியுள்ளார் சோனியா. இந்த நாராயணன், மறைந்த பிரபல ஆங்கில எழுத்தாளர். தன் கணவர் மறைந்த ராஜிவ் சம்பந்தப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்தும் சோனியா அதிகம் எழுதவில்லை. இந்த ஊழலில் பேசப்பட்ட, இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சி குறித்தும் வாய் திறக்கவில்லை. முதலில், இந்த புத்தகத்தை வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டது, ‘பெங்குயின்’ நிறுவனம். ‘உங்கள் புத்தகத்தில் உள்ள சில விஷயங்கள் உண்மையானதா என, சரிபார்க்க வேண்டும்’ என, பெங்குயின் நிறுவனம் கேட்டது. ஆனால், இதற்கு சோனியா மறுத்து விடவே, ‘ஹார்ப்பர் கோலின்ஸ்’ பதிப்பகம், சோனியாவின் புத்தகத்தை வெளியிட்டது.

புத்தகம் வெளியாகி விட்டாலும், டில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், புத்தக வெளியீட்டு விழா நாளை நடக்கிறது. இதில், சோனியா, அவரது மகனும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், அவரது மகளும், எம்.பி.,யுமான பிரியங்கா உட்பட பல பிரபலங்களும் பங்கேற்கின்றனர். அப்போது, தன் புத்தகத்தில் ஏற்பட்ட தவறுகளுக்கு சோனியா மன்னிப்பு கோருவார் என, சொல்லப்படுகிறது. 1,299 ரூபாய் விலையுள்ள இந்த புத்தகம், ஆன்லைனில், 998 ரூபாய்க்கு கிடைக்கிறது. இப்போது இலவசமாக, ‘வாட்ஸாப்’ குரூப்களில் பி.டி.எப்., வடிவத்தில் பகிரப்பட்டு வருகிறது.

சோனியா பேரனுக்கு கட்சி பதவி?

கரப்பான் கட்சிக்கு கிடைத்த மவுசை பார்த்த பா.ஜ., – காங்., கட்சிகள், இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. சமீபகாலமாக, பிரதமர் மோடி, இளைஞர்களை குறிவைத்தே கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதே போல ராகுலும், ‘மாணவர்களின் முழக்கம்’ என, நாடு தழுவிய பிரசார திட்டத்தை நடத்தி வருகிறார். சமீபத்தில், சென்னையில் இந்த பேரணியை நடத்தினார் ராகுல்.

கட்சியில் உள்ள வயதான தலைவர்களை ஓரங்கட்ட ராகுல் முடிவெடுத்துள்ளார். மூத்த தலைவர்கள் கமல்நாத், அம்பிகா சோனியா ஆகியோர் ஏற்கனவே கட்சியிலிருந்து ஒதுங்கி விட்டனர். கட்சியின் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, 200 இளைஞர்களை சோனியா, ராகுல் ஆகியோர் தேர்வு செய்துள்ளனர். ராகுல், அமெரிக்கா செல்வதற்கு முன், இந்த புதிய பட்டியல் வெளியாகும் என, சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, சோனியாவின் பேரனும், பிரியங்காவின் மகனுமான ரேஹான் வாத்ரா குறித்து காங்., வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 26 வயதான ரேஹான், ராஜிவ், ராகுல் ஆகியோர் படித்த உத்தரகண்டின் டேராடூனில் உள்ள டூன் பள்ளியில் படித்தவர். பிரிட்டனின் லண்டனில் உயர்கல்வி படித்துள்ளார். வனவிலங்கு புகைப்பட கலைஞராக உள்ளார். விரைவில் இவர் காங்கிரசில் இணைவார். அதன்பின், இவருக்கு இளைஞர் காங்., பதவி தரப்படும் என, பேச்சு அடிபடுகிறது.

ராகுல் போராட்டத்தால் தாக்கம் இல்லை!

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் அக்கட்சி தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் தேர்தல் கமிஷன் ஓட்டு திருட்டில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தான், பா.ஜ., வெற்றி பெற்று வருகிறது’ என, ராகுல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த போராட்டத்திற்கு கட்சிக்குள்ளேயே ஆதரவு இல்லை.

மூத்த தலைவர்கள் பலரும், ராகுல் போராட்டத்தில் பெயரளவிற்கு பங்கேற்கின்றனர். இதற்கிடையே, ராகுலுக்கு நெருக்கமானவரும், காங்கிரசின் வெளிநாடு குழுவின் தலைவருமான சாம் பிட்ரோடாவின் சமீபத்திய பேட்டி பிரச்னையை கிளப்பியுள்ளது.

‘வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தேர்தல் முறைகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்’ என, சாம் பிட்ரோடா கூறினாலும், வேறொரு விஷயத்தையும் அவர் தெளிவாக சொல்லியுள்ளார். ‘ராகுல் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான போராட்டம், இப்போதைய இளைஞர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை’ எனவும் பேட்டி அளித்துள்ளார். பல மூத்த தலைவர்கள் அவரது கருத்தை வரவேற்றுள்ளனர். ஆனால், இது குறித்து வெளிப்படையாக பேச பலரும் தயங்குகின்றனர்.

இன்னொரு பக்கம், பிரதமர் மோடியை சாம் பிட்ரோடா பாராட்டியதுடன், தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இது, கட்சிக்குள் பூகம்பத்தை கிளப்பி விட்டது. மோடிக்கு எதிராக பேசி வருபவர், திடீரென பல்டி அடிக்க காரணம் என்ன?

‘நான் காங்கிரசில் தான் இருப்பேன். நானும், மனைவியும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். பல முறை மோடியை அவரது வீட்டில் சந்தித்துள்ளேன். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர்’ என, விளக்கம் அளித்தும், இதை கட்சியினர் நம்ப தயாராக இல்லை. எது எப்படியோ, தேர்தல் கமிஷன் குறித்து சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.

அகிலேஷின் ராம பக்தி!

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த நான்கு மாதங்களில் நடக்கிறது. காங்கிரசை தவிர, மற்ற கட்சிகள் அனைத்தும் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் ஏற்கனவே களத்தில் இறங்கி, பா.ஜ.,விற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு அடுத்ததாக கட்சியில் பிரபலமாக இருப்பவர்கள், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா மற்றும் மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ். இவர்கள் அனைவரும், உ.பி.,யில் தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர். இவர்கள் எங்கு பிரசாரம் செய்ய வேண்டும் என்ற பட்டியலை, பா.ஜ., மேலிடம் தயாரித்துள்ளது.

மற்ற பா.ஜ., முதல்வர்களையும் பிரசாரத்தில் இறக்குகிறது கட்சி மேலிடம். இரண்டாவது முறையாக உ.பி., முதல்வராக உள்ள யோகி மீண்டும் வெற்றி பெறுவாரா? கடுமையான போட்டி பா.ஜ.,விற்கும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதிக்கும் இடையே தான் என்கின்றனர்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய போது கடும் எதிர்ப்பு தெரிவித்த அகிலேஷ், தற்போது தன் நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். வெறும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்தால், இரண்டாவது முறையாக முதல்வராக முடியாது என்பதை உணர்ந்துள்ளார். இதுவரை அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வதை தவிர்த்து வந்த அகிலேஷ், முதன்முறையாக ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளார்.

டிச., இரண்டாவது வாரத்தில், தன் குடும்பத்துடன் செல்கிறார். முதலில் புகழ்பெற்ற அயோத்தி ஹனுமன் கோவிலுக்கு சென்று பூஜை செய்து, பின், ராமர் கோவிலுக்கு செல்கிறார். வெறுமனே செல்லாமல் பெரும் ஊர்வலமாக செல்லப் போகிறாராம். ஹிந்து ஓட்டுகளை தன் பக்கம் இழுக்கவே இந்த ஏற்பாடு. எப்படியும் மீண்டும் வெற்றி பெறுவோம் என, பா.ஜ.,வினர் நம்பிக்கையுடன் இருந்தாலும், தமிழகத்தை போல எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் சொல்லப்படுகிறது.

கருத்துக்கள் சொல்ல:ndussh@dinamalar.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us