ADDED : டிச 20, 2025 01:39 AM

'விபி ஜி ராம் ஜி' மசோதா மூலம் 20 ஆண்டுகால மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை, மத்திய அரசு ஒரே நாளில் தகர்த்துள்ளது. இது, கிராமப்புற வளர்ச்சிக்கு எதிரானது. இந்த மசோதா, முறையாக பரிசீலிக்காமல் பார்லி.,யில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டது.
ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
கவுரவர்கள் ராஜ்யம்!
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஆனால், பா.ஜ.,வின் கிரிராஜ் சிங் போன்றோர் இதை கவுரவர்கள் ராஜ்யமாக மாற்ற விரும்புகின்றனர். திரவுபதிக்கு ஏற்பட்ட அநீதியின்போது கவுரவர்கள் எப்படி சிரித்தனரோ, அதேபோல் இவர்கள் பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரை ஆதரிக்கின்றனர்.
மெஹபூபா முப்தி தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
கலந்து ஆலோசிப்பதில்லை!
பார்லி.,யில் மத்திய அரசு தங்களுக்கு தோன்றியதை செய்கிறது. ஏதேனும் ஒரு முடிவு எடுக்கும்முன், எதிர்க்கட்சியினருடன் அவர்கள் கலந்து ஆலோசிப்பது இல்லை. சமூகத்தின் முக்கிய பிரச்னைகளை புறக்கணித்து, தேவையற்ற மசோதாக்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது.
ஜெயா பச்சன் ராஜ்யசபா எம்.பி., சமாஜ்வாதி

