ஹிந்தி நடிகர் தர்மேந்திரா நலமாக இருக்கிறார்: மகள் ஈஷா தியோல் தகவல்
ஹிந்தி நடிகர் தர்மேந்திரா நலமாக இருக்கிறார்: மகள் ஈஷா தியோல் தகவல்
UPDATED : நவ 11, 2025 10:08 AM
ADDED : நவ 11, 2025 09:27 AM

புதுடில்லி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள ஹிந்தி நடிகர் தர்மேந்திரா நலமுடன் இருக்கிறார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அவரது மகள் ஈஷா தியோல் தகவல் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா. இவர் வயது மூப்பு காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் 300க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் ஈஷா தியோல் தர்மேந்திராவின் உடல்நலம் குறீத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ''தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. என் தந்தையின் உடல்நிலை சீராகவும், முன்னேற்றமாகவும் உள்ளது. என் தந்தை விரைவில் குணமடைய உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் தர்மேந்திரா உயிரிழந்ததாக தகவல் வெளியாகிய நிலையில் அவரது மகள் ஈஷா தியோல் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

