புதிய தேர்தல் அலுவலர்களுக்கு தார்வாட் கலெக்டர் அறிவுரை
புதிய தேர்தல் அலுவலர்களுக்கு தார்வாட் கலெக்டர் அறிவுரை
ADDED : பிப் 22, 2024 07:07 AM

தார்வாட்: ''தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள், அப்பணியை செய்ய வேண்டும். மிகவும் அவசரம் என்றால் மட்டும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். அதை தவிர்த்து யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம்,'' என, தார்வாட் மாவட்ட கலெக்டர் திவ்யா பிரபா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று லோக்சபா தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன், கலெக்டர் திவ்யா பிரபா ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
லோக்சபா தேர்தலுக்கு தேவையான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள், பணியாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்ட தேர்தல் அதிகாரி முன் அனுமதியின்றி எந்த அதிகாரியும், ஊழியர்களும் வராமல் இருக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.