தார்வார் 'சீட்' எதிர்பார்க்கும் அமைச்சர் லட்சுமியின் மருமகன்
தார்வார் 'சீட்' எதிர்பார்க்கும் அமைச்சர் லட்சுமியின் மருமகன்
ADDED : பிப் 17, 2024 11:33 PM

தார்வாட், : லோக்சபா தேர்தலில் தார்வாட் தொகுதி, காங்கிரஸ் 'சீட்'டை, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் மருமகன் ரஜத் உல்லகத்தி எதிர்பார்க்கிறார்.
கர்நாடகா பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர். இவரது மருமகன் ரஜத் உல்லகத்தி. ஹுப்பள்ளி வித்யாநகர் பகுதி, காங்கிரஸ் தலைவராக உள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் அவருக்கு, ஹுப்பள்ளி - தார்வாட் மத்திய தொகுதி 'சீட்' கிடைக்க இருந்தது.
ஆனால் பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த, ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹுப்பள்ளி - தார்வாட் மத்திய தொகுதி 'சீட்' கிடைத்தது.
இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தலில், தார்வாட் தொகுதி காங்கிரஸ் 'சீட்'டை ரஜத் உல்லகத்தி எதிர்பார்க்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''சட்டசபை தேர்தலில் ஹுப்பள்ளி - தார்வாட் மத்திய தொகுதியில், நான் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. ஜெகதீஷ் ஷெட்டருக்காக, 'சீட்' தியாகம் செய்தேன். ஆனால் அவர், எங்கள் முதுகில் குத்திவிட்டு, பா.ஜ.,வுக்கு சென்றுவிட்டார். லோக்சபா தேர்தலில், தார்வாட் தொகுதி 'சீட்' எதிர்பார்க்கிறேன். கொடுப்பதும், விடுவதும் கட்சி மேலிடத்தின் முடிவு,'' என்றார்.